ADDED : செப் 17, 2026 11:10 PM

- நமது நிருபர் - :
* டேபிள் டென்னிஸ்
விஜயநகரா மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் நடத்தும், மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி வரும் 24 முதல் 27ம் தேதி வரை துங்கபத்ரா ஸ்போர்ட்ஸ் மையத்தில் நடக்கிறது. இதில், ஆடவர், மகளிர் இருவரும் பங்கேற்கலாம். 11, 13, 15, 17, 19 என பல வயதுக்கு உட்பட்ட பரிவுகளில் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க, வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://karnatakabletennis.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
* கேப்டனாக ஷ்ரேயா
பி.சி.சி.ஐ., நடத்தும், 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான, டி - 20 கிரிக்கெட் போட்டி, அடுத்த மாதம் 9ம் தேதி முதல், 26ம் தேதி வரை சண்டிகரில் நடக்கிறது. இதில், கர்நாடக அணியும் பங்கேற்கிறது. இப்போட்டிக்கான கர்நாடக கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷ்ரேயா சவான் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
* அன்வே தேர்வு
பி.சி.சி.ஐ., நடத்தும் வினு மங்கட் டிராபி 50 ஓவர் போட்டி, அடுத்த மாதம் 8ம் தேதி புதுச்சேரியில் துவங்குகிறது. இதில், கர்நாடகா அணியில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அன்வேவை சேர்த்து, 25 வீரர்களுக்கு இன்று முதல் பயிற்சிகள் துவங்குகிறது.
