தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காந்தி கிராம சவுதா கட்டடம் மாலுாரில் திறப்பு

 காந்தி கிராம சவுதா கட்டடம் மாலுாரில் திறப்பு

 காந்தி கிராம சவுதா கட்டடம் மாலுாரில் திறப்பு


ADDED : பிப் 13, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாலுார்: மாலுாரின் டேக்கல் அருகேயுள்ள கே.ஜி.ஹள்ளியில், காந்தி கிராம சவுதாவிற்கான புதிய கட்டடத்தை மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மாலுார் தாலுகாவில் உள்ள கிராமங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வருகிறோம். கே.ஜி.ஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களின் முழுமையான வளர்ச்சிக்காக, பல்வேறு துறைகளிடமிருந்து நிதி பெற்று, இங்கு, காந்தி கிராம சவுதாவுக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது, பிற கிராம பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு முன் மாதிரியாக அமைந்துள்ளது.

மாலுார் தாலுகாவில், 10,000த்துக்கும் மேற்பட்டோர் நிலமற்றவர்களாக உள்ளனர். நிலமற்ற ஏழைகளுக்கு மார்ச், 31ம் தேதி முதல்வர் சித்தராமையா முன்னிலையில் நிலப் பட்டாக்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக மேலவை உறுப்பினர் அனில் குமார், கே.ஜி.ஹள்ளி கிராம பஞ்சாயத்து தலைவர் முருகேசன், துணைத்தலைவர் மம்தா, உறுப்பினர்கள் சசிதரா, ரமேஷ் கவுடா,

எச்.பி. வினோத் கவுடா, திம்ராயப்பா, ஒய். ஆர். சதீஷ், ராஜண்ணா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us