தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/டிஜிட்டல் அருங்காட்சியகத்தில் காந்தியின் வாழ்க்கை பயணம்

டிஜிட்டல் அருங்காட்சியகத்தில் காந்தியின் வாழ்க்கை பயணம்

டிஜிட்டல் அருங்காட்சியகத்தில் காந்தியின் வாழ்க்கை பயணம்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பெங்களூரு காந்தி பவனில் டிஜிட்டல் அருங்காட்சியத்தை, முதல்வர் சிவகுமார் நேற்று திறந்து வைத்து, மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார்.

மகாத்மா காந்தியின் குழந்தை பருவம் முதல் இறுதி வாழ்க்கை வரையிலான பயணத்தை, இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்கள், வரலாற்று ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் முழு விளக்கத்தை தெரிந்து கொள்ளும் வகையில், கன்னடம், ஆங்கிலத்தில் குரல் வழி தகவல்களை புரிந்து கொள்ள கியூஆர் குறியீடு தொழில்நுட்பமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பார்வையற்றவர்களும் இதன் மூலம் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அருங்காட்சியக வளாகத்தில் சபர்மதி ஆசிரமத்தின் மாதிரி வடிவம் கட்டப்பட்டுள்ளது.

தினமும் ஒரு பள்ளி அல்லது கல்லுாரி மாணவ – மாணவியரை இங்கு அழைத்து வந்து, வினாடி, வினா நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us