தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வடகிழக்கு பருவமழையும் குறையும்?

வடகிழக்கு பருவமழையும் குறையும்?

வடகிழக்கு பருவமழையும் குறையும்?


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: தென்மேற்கு பருவ மழை போலவே, வடகிழக்கு பருவமழையும் பற்றாக்குறை ஏற்படும் அறிகுறிகள் தென்படுவதாக, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக உணவு தானியங்கள் உற்பத்தி, 30 முதல் 40 சதவீதம் குறையலாம் என, அஞ்சப்படுகிறது.

கர்நாடகாவில் நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. கடந்த 56 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, 90 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் 90 சதவீதம் தாலுகாக்களில், வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகிழக்கு பருவமழையும் குறையும் என, வானிலை ஆய்வியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, உணவு தானியங்கள் உற்பத்தி குறையும் என, அஞ்சப்படுகிறது.

இது குறித்து, வானிலை வல்லுநர் சீனிவாச ரெட்டி கூறியதாவது:

தென்மேற்கு பருவ மழை அளவு குறைந்தால், அந்த பற்றாக்குறையை வடகிழக்கு பருவமழை ஈடு செய்யும். இதன் மூலம் விளைச்சல் சேதம் அளவை குறைக்கும். ஆனால் இம்முறை தென்மேற்கு பருவ மழை, 34 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் மட்டுமே, 54 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டது.

வடகிழக்கு பருவமழையும், எதிர்பார்த்த அளவில் இருக்கும் அறிகுறி தென்படவில்லை. பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

இதனால் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடும் அளவும் குறையலாம். இதனால் விவசாய உற்பத்திகளுக்கு, தண்ணீர் கிடைக்காது. இதன் விளைவாக உணவு தானியங்கள் உற்பத்தி குறையும். வரும் நாட்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும்.

விவசாயிகள் புதிதாக விளைச்சலை பயிரிடாமல், இருக்கும் விளைச்சலை தக்க வைத்து கொள்வது நல்லது. வடகிழக்கு பருவமழை 30 சதவீதம் பற்றாக்குறை ஏற்படலாம். குடிநீர் பிரச்னை, பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருப்பதுடன், நிலத்தடி நீர் மட்டமும் குறையும். மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன், நீரை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us