sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

/

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வழிகாட்டுதல்கள் அறிவிப்பு


ADDED : ஆக 24, 2025 05:37 AM

Google News

ADDED : ஆக 24, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வழிகாட்டுதல்களை கர்நாடக மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

கர்நாடக மக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தயாராகி வருகின்றனர். இது தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்:

 பி.ஓ.பி., எனும் பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்பட்ட சிலைகள் தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை சட்ட விரோதமாக தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

 எந்தவொரு நதி, கால்வாய், கிணறு அல்லது பிற நீர்நிலைகளில் பி.ஓ.பி., சிலைகள், வண்ணம் பூசப்பட்ட சிலைகளை கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை பொருட்களால் செய்யப்பட்டு, இயற்கை வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை வைக்க வேண்டும்

 விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் முன்பு, பூக்கள், பழங்கள், வாழை இலைகள், மாம்பழ இலைளை அகற்றிய பின்னரே கரைக்க வேண்டும்

 பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள், உள்ளாட்சி அமைப்புகள், போலீஸ் துறையிடம் அனுமதி பெற வேண்டும்

 இரவு 10:00 முதல் காலை 6:00 மணி வரை ஒலி பெருக்குகள் பயன்படுத்த தடை

 ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை. பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்

 விநாயகர் சிலைகளை கரைக்க செல்லும்போது, இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும். அவ்வாறு செல்வோர், உயிர் காக்கும் கவசம் அணிய வேண்டும்

 திறமையான நீச்சல் வீரர்கள் முன்னிலையில் தான், விநாயகர் சிலை கரைக்க வேண்டும்

 அக்., 27 முதல் செப்., 15ம் தேதி வரை டிஜே ஒலி, பைக் ஊர்வலங்கள், வண்ண காகித வெடிப்பு, பட்டாசு வெடித்தல் தடை செய்யப்பட்டு உள்ளன. விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us