தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு டேனரி ரோட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

 பெங்களூரு டேனரி ரோட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

 பெங்களூரு டேனரி ரோட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்


ADDED : செப் 19, 2026 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 11:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டேனரி ரோடு: பெங்களூரு கே.ஜி.ஹள்ளி, டேனரி ரோடு பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரமாண்ட ஊர்வலம், விசர்ஜன விழா நடந்தது.

இங்குள்ள பல்வேறு இளைஞர் மன்றங்கள், குடியிருப்பு சங்கங்கள் சார்பில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், ஒரே இடத்தில் அணிவகுத்து, டேனரி ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

பாரம்பரிய களிமண் சிலைகள், சுற்றுச்சூழல் நட்பு விநாயகர்கள் மற்றும் விதவிதமான தீம்களில் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலைகள் என, 100க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலத்தில் பங்கேற்றன.

பிரமாண்ட ஊர்வலப் பாதை : கே.ஜி.ஹள்ளி, டேனரி ரோடு, பாட்டரி ரோடு, எம்.எம்., சாலை, அசையா சாலை, நேதாஜி சந்திப்பு வழியாக ஹலசூரு ஏரியை சென்றடைந்தன. ஊர்வலத்தில் செண்டை மேளம், வண்ண விளக்கு அலங்காரங்கள், கலை நிகழ்ச்சிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

ஊர்வலத்தை ஒட்டி, டேனரி ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள நாகவாரா மெயின் ரோடு, பாட்டரி சதுக்கம் மற்றும் கிளாரன்ஸ் பாலம் வழியாக, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us