தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சுவரில் பைக் மோதல் இரு மாணவர்கள் பலி

 சுவரில் பைக் மோதல் இரு மாணவர்கள் பலி

 சுவரில் பைக் மோதல் இரு மாணவர்கள் பலி


ADDED : செப் 19, 2026 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 11:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எலஹங்கா: சுவரில் பைக் மோதியதில் இரண்டு கல்லுாரி மாணவர்கள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரதீப், 21, வச்சன், 19. இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் கல்லுாரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தனர்.

பிரதீப் மூன்றாம் ஆண்டும், வச்சன் முதலாம் ஆண்டும் படித்தனர். இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை, 'புல்லட்' பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

பெங்களூரு எலஹங்கா ராஜானுகுண்டே சாலையில் இருவரும் பைக்கில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரத்தில் உள்ள கடையின் சுவர் மீது மோதியது. இதில், பைக்கின் முன்பக்கம் நொறுங்கி, சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த எலஹங்கா போலீசார், விசாரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us