/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழைப்பழம் கொழுக்கட்டை
/
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழைப்பழம் கொழுக்கட்டை
ADDED : ஆக 22, 2025 11:22 PM

விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பல பலகாரங்கள் செய்து, விநாயகரை வழிபடுவது வழக்கம். எத்தனை பலகாரங்கள் செய்தாலும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டையை செய்வதற்கு தான் அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கும். அப்படிப்பட்ட கொழுக்கட்டையை எப்படி சுவையாக செய்யலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
செய்முறை நன்கு பழுத்த பெரிய வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, அதை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். அவற்றை மசித்துவிட்டு, அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
இதனுடன் துருவிய தேங்காய், ஏலக்காய் துாள், நறுக்கிய முந்திரி சேர்த்து நன்கு கிளறவும். இதனுடன் கோதுமை மாவு, பொடியாக்கிய அவல் சேர்த்து தண்ணீர் சேர்க்கமால் நன்கு பிசையவும்.
இந்த கலவையை பெரிய அளவு லட்டாக உருமாற்றி வைக்கவும். அதன் மீது நெய் ஊற்றி, பிசைந்து வைக்கவும். பின், கலவையிலிருந்து சிறிய உருண்டைகளை பிரித்து கொழுக்கட்டை அச்சை பயன்படுத்தி, கொழுக்கட்டைகளை பிடித்து வைக்கவும்.
இதை, இட்லி பாத்திரத்தில் போட்டு 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால், சுவையான வாழைப்பழம் கொழுக்கட்டை தயார்.
இந்த வாழைப்பழ கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்திக்கு படைத்து, கணேசனையும், வீட்டில் உள்ளோரையும் குஷிபடுத்த வேண்டியது தானே
- நமது நிருபர் -.