தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வீட்டின் பூட்டை உடைத்து ரூ.65,000 திருடிய கும்பல்

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.65,000 திருடிய கும்பல்

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.65,000 திருடிய கும்பல்


ADDED : ஜூன் 23, 2025 08:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 08:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சதாசிவ நகர் : மகள்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த, கடன் வாங்கி வைத்திருந்த 65,000 ரூபாய் திருட்டு போனதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பெங்களூரு, சதாசிவ நகரின் பேலஸ் கிரவுண்டில் வசிப்பவர் சீனிவாஸ். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூவரும் கல்லுாரியில் படிக்கின்றனர். இவர்களின் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு பணம் தேவைப்பட்டதால், 65,000 ரூபாய் கடன் வாங்கி வீட்டின் பீரோவில் வைத்திருந்தார்.

சீனிவாசும், அவரது மனைவியும் பணிக்கும்; மகள்கள் கல்லுாரிக்கும் சென்றிருந்தனர். வீடு பூட்டியிருந்தது. இதை நோட்டம் விட்ட மர்ம நபர்கள், மதியம் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த பணத்தையும், 5 கிராம் தங்க நகையை திருடி கொண்டு தப்பியோடினர்.

தம்பதியும், மகள்களும் இரவு வீட்டுக்கு வந்த போது, திருட்டு நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மகள்களின் கல்வி கட்டணத்துக்காக வைத்திருந்த பணம் திருட்டு போனதால், தம்பதி கவலையில் உள்ளனர்.

சதாசிவ நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசாரும் நேற்று காலை சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று, பார்வையிட்டனர். சுற்றுப்புற சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, ஆய்வு செய்து திருடர்களை பிடிக்க முயற்சிக்கின்றனர். இவர்களின் வீட்டின் அருகில் உள்ள ஏரியில், மீன் பிடிக்க பலர் வருகின்றனர். அவர்களில் யாராவது திருடியிருக்கலாம் என, சீனிவாஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us