கள்ளக்காதலியின் மகள்களை தாக்கிய காங்., பிரமுகர் கைது
கள்ளக்காதலியின் மகள்களை தாக்கிய காங்., பிரமுகர் கைது
ADDED : ஏப் 29, 2026 01:33 AM

மஹாலட்சுமி லே - அவுட்: கள்ளக் காதலியின் மகள்களை தாக்கிய, காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலரும், மஹாலட்சுமி லே - அவுட் தொகுதி காங்கிரஸ் தலைவருமாக பணியாற்றி வருபவர் ஆனந்த் நாயுடு, 42. இவருக்கு, திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதுபற்றி அறிந்த அப்பெண்ணின் கணவர் மனைவியை கண்டித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன், கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்த ஆனந்த்நாயுடு, கள்ளக்காதலியின் கணவர் ராகவேந்திராவை தாக்கி உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகவேந்திராவின் 13, 14 வயது மகள்கள், ஆ னந்த் நாயுடுவை தடுக்க முயன்றனர்.
கோபம் அடைந்த அவர், கள்ளக்காதலியின் மக ள்களின் தொடையில் இரும்பு கம்பியால் அடித்து உள்ளார். இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டி இருக்கிறார். ஆனாலும், ஆனந்த் நாயுடு மீது அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசில், ராகவேந்திரா கடந்த, 25 ம் தேதி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆனந்த் நாயுடுவை நேற்று கைது செய்தனர்.
