sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சினிமா பாணியில் துப்பாக்கியுடன் காங்., தலைவர் நடனம்

/

 சினிமா பாணியில் துப்பாக்கியுடன் காங்., தலைவர் நடனம்

 சினிமா பாணியில் துப்பாக்கியுடன் காங்., தலைவர் நடனம்

 சினிமா பாணியில் துப்பாக்கியுடன் காங்., தலைவர் நடனம்


ADDED : பிப் 11, 2026 06:45 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி: துரந்தர் படத்தில் அக் ஷய்கண்ணா நடனமாடுவது போல கையில் துப்பாக்கியுடன் காங்கிரஸ் தலைவர் நடனமாடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

துரந்தர் படத்தில் அக் ஷய் கண்ணா நடனம் ஆடுவது போல பலரும் சமூக வலைத்தளங்களில் நடமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில், கலபுரகி மாவட்டம் அப்சல்பூர் தொகுதி எம்.எல்.ஏ., எம்.ஒய்.பாட்டீலின் நெருக்கமானவர்களில் ஒருவரும், அப்சல்பூர் காங்கிரஸ் தலைவருமான மதின் அகமது படேல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவே வில்லங்கத்திற்கு காரணமாக மாறிவிட்டது.

இவர் சமீபத்தில் திருமண நிகழ்வுக்கு சென்று உள்ளார். அப்போது, காரில் இருந்து இறங்கி மேடைக்கு வரும் வரை, அருகில் துப்பாக்கி ஏந்திய 'கன்மேன்களுடன்' வருகிறார்.

மேடைக்கு வந்ததும் தனது பாக்கெட்டில் இருந்து கைத்துப்பாக்கியை எடுத்து, அதை வானத்தை நோக்கி சுடுவது போன்ற பாவனை செய்து நடனமாடுகிறார்.

இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா? போலீசார் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us