sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெண் அதிகாரியை மிரட்டிய காங்., பிரமுகர் சிறையில் அடைப்பு

/

 பெண் அதிகாரியை மிரட்டிய காங்., பிரமுகர் சிறையில் அடைப்பு

 பெண் அதிகாரியை மிரட்டிய காங்., பிரமுகர் சிறையில் அடைப்பு

 பெண் அதிகாரியை மிரட்டிய காங்., பிரமுகர் சிறையில் அடைப்பு


ADDED : ஜன 28, 2026 07:11 AM

Google News

ADDED : ஜன 28, 2026 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கபல்லாபூர்: பெண் அதிகாரியை ஆபாசமாக திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்த வழக்கில், கைதான காங்கிரஸ் பிரமுகர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்த தொழில் அதிபர் கைதான நிலையில் அவருக்கு ஜாமின் கிடைத்து உள்ளது.

சிக்கபல்லாபூர் சித்லகட்டாவில் பேனரை அகற்றியதால், நகராட்சி கமிஷனரான கே.ஏ.எஸ்., அதிகாரி அம்ருதா கவுடாவை, மொபைல் போனில் ஆபாசமாக திட்டியதுடன், உயிருடன் எரித்து விடுவேன் என்றும், சித்லகட்டா காங்கிரஸ் பிரமுகர் ராஜிவ் கவுடா கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக கடந்த, 14ம் தேதி சித்லகட்டா போலீசில், ராஜிவ் கவுடா மீது வழக்கு பதிவானது. தலைமறைவாக இருந்த அவர் கேரளாவின் மலப்புரத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை சித்லகட்டாவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணைக்கு பின், சித்லகட்டா செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரிக்க வேண்டி இருப்பதால், போலீஸ் காவலுக்கு அனுப்பும்படி நீதிபதியிடம் கேட்கப்பட்டது. ஆனால், ராஜிவ் கவுடாவை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சிக்கபல்லாபூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் ராஜிவ் கவுடாவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, மங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் மைக்கேல் ரெகோ என்பவரும் கைது செய்யப்பட்டு இருந்தார். அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு குறித்து சிக்கபல்லாபூர் எஸ்.பி., குஷால் சவுக்சி கூறுகையில், ''மங்களூரு தொழில் அதிபர் மைக்கேலுக்கு, பெங்களூரில் உள்ள அரசியல் தலைவர்களுடன் தொடர்பு உள்ளது. இப்படி அறிமுகமானவர் தான் ராஜிவ். அவர் இங்கிருந்து தலைமறைவு ஆனதும் மைக்கேலுக்கு சொந்தமான வாமஞ்சூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கி இருந்தார்.

''அந்த வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. ராஜிவ் அங்கிருப்பதை போலீஸ் உறுதி செய்ததும், அவரை காரில் அழைத்து கொண்டு, கேரளாவுக்கு மைக்கேல் தப்பினார். இருவரையும் மலப்புரத்தில் கைது செய்தோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us