/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; பெலகாவியில் 4 பேர் கும்பல் கைது
/
15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; பெலகாவியில் 4 பேர் கும்பல் கைது
15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; பெலகாவியில் 4 பேர் கும்பல் கைது
15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்; பெலகாவியில் 4 பேர் கும்பல் கைது
ADDED : ஜூன் 02, 2025 12:32 AM
பெலகாவி : பெலகாவி அருகே, 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த நான்கு பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
பெலகாவி டவுனில் வசிக்கும் தம்பதியின் மகள், 15 வயது சிறுமி. இவருக்கும், பெலகாவி அருகே காகதி கிராமத்தில் வசிக்கும் 21 வயது வாலிபருக்கும் இடையே, சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
வாலிபர் அழைத்ததால், கடந்த ஆண்டு டிசம்பரில், காகதி கிராமத்திற்கு சிறுமி சென்றார்.
சிறுமியை, வாலிபர் காரில், 'பிக்கப்' செய்து, கிராமத்தில் உள்ள மலை அடிவாரத்திற்கு அழைத்து சென்றார். அங்கு, நண்பர்கள் நான்கு பேரை மொபைல் போனில் பேசி வரவழைத்தார்.
பின், ஐந்து பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர். அதை, மொபைல் போனில் வீடியோவும் எடுத்து கொண்டனர்.
'இதுபற்றி வெளியே கூறினால், வீடியோவை வெளியிட்டு விடுவோம்' என்று மிரட்டினர்.
பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. கடந்த ஜனவரியில் சிறுமியை மீண்டும், மலை பகுதிக்கு அழைத்து சென்று ஐந்து பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பின், சிறுமி யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து உள்ளார். அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்பட்டு உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றோர் அதட்டி கேட்ட போது, தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காகதி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு சிறுவர்கள் உட்பட நான்கு பேரை நேற்று கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.