/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காரை பஞ்சராக்கி கொள்ளை 8 பேர் கும்பலுக்கு வலை
/
காரை பஞ்சராக்கி கொள்ளை 8 பேர் கும்பலுக்கு வலை
ADDED : நவ 21, 2025 06:11 AM
பீதர்: பசவ கல்யானா தேசிய நெடுஞ்சாலையில், காரை பஞ்சராக்கி மஹாராஷ்டிரா நபர்களிடம், தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
கதக் மாவட்டம், பசவ கல்யானா நகரின், மன்டாளா கிராஸ் அருகில், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திடீரென பஞ்சராகி நின்றது.
அப்போது, எட்டு பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல் வந்து, காரில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 1.60 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துத்தப்பினர்.
காரில் இருந்த பிரவீனும், மற்றவர்களும் மஹாராஷ்டிராவின் சாங்க்லி மாவட்டம், யேதகாவ் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
தங்களிடம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, பசவ கல்யானா போலீஸ் நிலையத்தில் பிரவீன் புகார் அளித்தார்.
போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், தேசிய நெடுஞ்சாலையில் ஆணிகளை கொட்டி, காரின் டயரை பஞ்சராக்க வைத்து, காரை நிறுத்தி கொள்ளையடித்தது தெரிந்தது.

