ADDED : நவ 21, 2025 06:11 AM
காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பால், இக்கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால் முதல்வர் பதவிக்காக சித்தராமையாவும், சிவகுமாரும் முட்டி மோதுகின்றனர்.
சட்டசபை தேர்தலின்போதே, இவ்விருவரும் தலா 30 மாதங்கள் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் ஆகியுள்ளது. பதிவு பகிர்வு ஒப்பந்தத்துக்கு சம்மதித்த சித்தராமையா, சிவகுமாரின் தலை மீது வலது கை வைத்து, '30 மாதங்களுக்கு பின், முதல்வர் பதவியை உங்களிடம் ஒப்படைப்பேன்' என, வாக்குறுதி அளித்தது உண்மை இல்லையா?
காங்கிரஸ் அரசு இரண்டரை ஆண்டுகளை, நிறைவு செய்துள்ளது. எனவே கொடுத்த வாக்குறுதிபடி, முதல்வர் பதவியை சிவகுமாருக்கு சித்தராமையா விட்டுத்தர வேண்டும். இவர் பதவி தாகம் கொண்டவர். எனவே நாற்காலியை விட்டுத்தரவில்லை. மீதமுள்ள இரண்டரை ஆண்டும், தானே முதல்வராக இருக்க வேண்டும் என, ஆசைப்படுகிறார். தன் ஆதரவாளர்கள் மூலம், ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்.
- விஸ்வநாத், பா.ஜ., - எம்.எல்.சி.,

