/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., வீரேந்திர பப்பிக்கு மேலும் 6 நாள் ஈ.டி., காவல்
/
காங்., வீரேந்திர பப்பிக்கு மேலும் 6 நாள் ஈ.டி., காவல்
காங்., வீரேந்திர பப்பிக்கு மேலும் 6 நாள் ஈ.டி., காவல்
காங்., வீரேந்திர பப்பிக்கு மேலும் 6 நாள் ஈ.டி., காவல்
ADDED : ஆக 28, 2025 11:09 PM

பெங்களூரு: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான, சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியை, மேலும் ஆறு நாட்கள் ஈ.டி., காவலுக்கு அனுப்பி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி. கோவா மாநிலத்தில் சூதாட்ட விடுதிகள் நடத்தும் இவர், அங்கு கிடைத்த பணத்தை வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்தார். இதனால் அவரை கடந்த 23 ம் தேதி, சிக்கிம் மாநிலத்தில், ஈ.டி., எனும் அமலாக்கத்துறை கைது செய்தது.
பெங்களூரு அழைத்து வரப்பட்ட அவர், 24ம் தேதி மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஈ.டி.,க்கு அனுமதி வழங்கப்பட்டது. ஐந்து நாட்கள் காவல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் முன்பு வீரேந்திர பப்பி ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜன்னல் இல்லை அவரது சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கிரண் ஜவளி வாதிடுகையில், ''எனது மனுதாரரை விசாரணை என்ற பெயரில், ஈ.டி., அதிகாரிகள் துன்புறுத்துகின்றனர். தினமும் அதிகாலை 3:00 மணி வரை விசாரிக்கின்றனர்.
அவரை சரியாக துாங்க விடுவது இல்லை. சரியான உணவு கொடுப்பது இல்லை. சுத்தமான தண்ணீர் கொடுப்பது இல்லை.
''ஜன்னல் இல்லாத அறையில் அடைத்து வைத்து துன்புறுத்துகின்றனர். கடந்த 2016 ல் சித்ரதுர்காவின் செல்லகெரேயில் எனது மனுதாரர் மீது பதிவான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது.
அந்த வழக்கின் அடிப்படையில் தற்போது அவரை, அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், ''சி.பி.ஐ., நடத்தும் விசாரணை என்ன ஆனது,'' என்று கேட்டார். ''விசாரணை முடிந்து விட்டது,'' என்று, கிரண் ஜவளி கூறினார். மேலும் அவர் கூறுகையில், ''எதற்காக கைது செய்தோம் என்று கூட, மனுதாரரிடம் இதுவரை ஈ.டி., சொல்லவில்லை,'' என்றார்.
சந்திக்க அனுமதி ஈ.டி., தரப்பு வக்கீல், தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்ததுடன், 'மனுதாரர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை.
மேலும் ஆறு நாட்கள் அவரை தங்கள் காவலுக்கு அனுப்ப வேண்டும்' என்று கேட்டு கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், வீரேந்திர பப்பியை, மேலும் ஆறு நாட்கள் ஈ.டி., கா வலுக்கு அனுப்பினார்.
'அவருக்கு துாங்குவதற்கு போதுமான நேரம் கொடுங்கள்; சுத்தமான குடிநீர்; தரமான உணவு கொடுங்கள்; தினமும் அரை மணி நேரம் வக்கீலை சந்திக்க அனுமதி கொடுங்கள்' என்றும் ஈ.டி.,க்கு அறிவுறுத்தினார்.