ADDED : ஜூலை 16, 2025 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு : ஸ்கூட்டரில் கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மைசூரு உதயகிரி போலீசார் நேற்று, வாகன சோதனை நடத்தினர். நம்பர் பிளேட் இல்லாமல் ஒருவர் ஸ்கூட்டர் ஓட்டி வந்தார். ஸ்கூட்டரை நிறுத்தி டிக்கியை திறந்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
அதன் எடை 1.860 கிலோ இருந்தது. அதன் மதிப்பு 60,000 ரூபாய். ஸ்கூட்டர் ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் முஜாமில் ஷெரிப், 25 என்பது தெரிந்தது.