பெங்களூரு, மங்களூரில் ரூ.26 லட்சம் கஞ்சா பறிமுதல்
பெங்களூரு, மங்களூரில் ரூ.26 லட்சம் கஞ்சா பறிமுதல்
ADDED : மே 16, 2026 03:38 AM
பெங்களூரு: பெங்களூரு, மங்களூரு நகரங்களில், 16 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரின் யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக, தகவல் கிடைத்தது. இதையடுத்து கலால் துறை அதிகாரிகள், நேற்று காலை ரயில் நிலையத்துக்கு வந்து சோதனை நடத்தினர். பிளாட்பாரத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பை கிடந்தது. அதிகாரிகள் அதை சோதித்த போது, 13.41 கிலோ உயர் ரக கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு, 25 லட்சம் ரூபாயாகும்.
அதிகாரிகள் சோதனை நடத்தியதால், கஞ்சா கொண்டு வந்த நபர், சிக்குவோம் என்ற பீதியால் பையை வீசிவிட்டு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தெரியவில்லை. ரயில் நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
l தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் மேரிஹில் அருகில் நேற்று காலை பொது மக்களுக்கு, கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவூர் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். கஞ்சா வைத்திருந்த இர்ஷாத், 30, கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து, 1.56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரது ஸ்கூட்டர், மொபைல் போன் கைப்பற்றப்பட்டன.
