/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கசபா' நிர்வாக அதிகாரியாக காயத்ரி நியமனம்
/
'கசபா' நிர்வாக அதிகாரியாக காயத்ரி நியமனம்
ADDED : அக் 28, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கன்னட சாகித்ய பரிஷத் தலைவராக இருப்பவர் மகேஷ் ஜோஷி. இவர், தலைவராக பொறுப்பு ஏற்ற பின், 'கசபா'வில் நிறைய முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அதிகாரியை நியமித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் மகேஷ் ஜோஷி அதிகாரத்தை குறைக்கும் வகையில், 'கசபா' நிர்வாக அதிகாரியாக கன்னட மற்றும் கலாசார துறை இயக்குனர் காயத்ரியை நியமித்து அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

