தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காயத்ரி பரிவார் அமைப்பின் 2வது கிளை கோலாகல துவக்கம்

 காயத்ரி பரிவார் அமைப்பின் 2வது கிளை கோலாகல துவக்கம்

 காயத்ரி பரிவார் அமைப்பின் 2வது கிளை கோலாகல துவக்கம்


ADDED : பிப் 02, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: காயத்ரி பரிவார் அமைப்பின், இரண்டாவது கிளை துவக்க விழா மாகடி ரோடு டோல்கேட் சதுக்க பகுதியில் நேற்று நடந்தது. ஸ்ரீகாயத்ரி மஹா மந்திர ஜெய யக்ஞத்தை ஜெபிக்கும் போது, தங்கள் வாழ்வில் ஏற்படும் நேர்மறையான மாற்றங்கள் குறித்து, பலரும் உற்சாகமாக பேசினர்.

தமிழகத்தின் மதுரையில்1987ம் ஆண்டு, காயத்ரி பரிவார் அமைப்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் பெங்களூரு ஹலசூரு ஸ்ரீ பாண்டு ரங்கன் ருக்மணி கோவில் - விட்டலா மந்திரில் 2010 முதல் ஸ்ரீ காயத்ரி மஹா மந்திர ஜெப யக்ஞம் நடக்கிறது. இந்த அமைப்பின் 2வது கிளை, பெங்களூரு மாகடி ரோடு டோல்கேட் சதுக்கம் அருகில் உள்ள, வேதாத்திரி மகரிஷி யோகா சென்டரில் நேற்று துவங்கப்பட்டது.

வி.கே.கண்ணன் குருஜி தலைமையில் நடந்த, ஸ்ரீகாயத்ரி மஹா மந்திர ஜெப யக்ஞத்தில், காயத்ரி மந்திரம், சகலதேவதை காயத்ரி மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டன. விஜயநகரில் உள்ள கனராஜா கோவிலின் பிரதான அர்ச்சகர் கோபி சுவாமிகள், காயத்ரி தேவியின் உருவப்படத்திற்கு பூஜை செய்து தீபாராதனை, நெய்வேத்தியம் காட்டினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, ஆன்மிக புத்தக ஆசிரியர் கே.சத்யமூர்த்தி கன்னட மொழியில் எழுதிய 'ஜெப யக்ஞம்' புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை வெளியிட உதவியாக இருந்த ஸ்ரீநாத், அவரது மனைவி நம்ருதா ஸ்ரீநாத் ஆகியோருக்கும்பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெய யக்ஞத்தில் கலந்து கொண்டவர்கள், ஸ்ரீகா யத்ரி மஹா மந்திரத்தை தினமும் உச்சரிப்பதால், தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நேர்மறையான மாற்றங்கள் குறித்து, உற்சாகமாக பேசினர்.

காயத்ரி பரிவார் து வங்கியது, தற்போது அதன் செயல்பாடுகள், காயத்ரி பரிவார் அமைப்பின் நிகழ்ச்சிகள் குறித்து, 'தினமலர்' நாளிதழில் வெளியிட்ட செய்திகள், புகைப்படங்கள் குறித்து, புரொஜக்டர் மூலம் திரையிடப்பட்டது.தினமலர் நாளிதழுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். வரும் 8ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், புதிய கிளையில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.ஸ்ரீதர் தலைமையில், ஸ்ரீகாயத்ரி மஹா மந்திர ஜெய யக்ஞம் நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us