தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜி.பி.ஏ., தேர்தலுக்கு ஓட்டுச்சீட்டு சங்கங்கள், அமைப்புகள் எதிர்ப்பு

 ஜி.பி.ஏ., தேர்தலுக்கு ஓட்டுச்சீட்டு சங்கங்கள், அமைப்புகள் எதிர்ப்பு

 ஜி.பி.ஏ., தேர்தலுக்கு ஓட்டுச்சீட்டு சங்கங்கள், அமைப்புகள் எதிர்ப்பு


ADDED : பிப் 02, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு நடக்கிறது. இம்முறை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு சங்க, அமைப்புகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு மாநகராட்சியில், 2020 செப்டம்பர் 10ம் தேதி, மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி காலம் முடிவடைந்தது. அதன்பின் தேர்தல் நடத்தி, புதிய கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் அன்றைய பா.ஜ., அரசு, கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்தது. மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரியை நியமித்தது.

அதன்பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தியது. பெங்களூரு மாநகராட்சியை கிரேட்டர் பெங்களூரு ஆணையமாக மாற்றியது. ஐந்து மாநகராட்சிகளாக பிரித்தது.

இதற்கிடையே, முன்னாள் கவுன்சிலர்கள் சிலரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஜி.பி.ஏ.,வுக்கு தேர்தல் நடத்தும்படி சமீபத்தில் உத்தரவிட்டது. இதன்படி தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக தயாராகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது, காங்கிரஸ் உட்பட, பல்வேறு கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

பல மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியில் அமர, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்வதே காரணம். இக்கட்சிக்கு தேர்தல் ஆணையமும் ஒத்துழைப்பு அளிக்கிறது என, குற்றம்சாட்டுகின்றனர். எனவே இம்முறை ஜி.பி.ஏ., தேர்தலில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆனால் இதற்கு சிட்டிசன் பார் சிட்டிசன், பி பாக் உட்பட, பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. 'தொழில்நுட்ப வளர்ச்சியில், உலகத்தின் கவனத்தை தன் வசம் திருப்பிய பெங்களூரில், ஓட்டுச்சீட்டு பயன்படுத்தினால் நகருக்கு செய்யும் அவமதிப்பு. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும்' என, வலியுறுத்துகின்றன. இது தொடர்பாக, தேர்தல் கமிஷனரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளன.

மார்ச் 26ல் பள்ளிகளில், ஆண்டு தேர்வு முடிவடைகின்றன. அதன்பின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி, தேர்தல் பணிகளை துவங்கி, ஜூன் 30க்குள் ஜி.பி.ஏ.,வுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us