/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் கலாசிபாளையா பஸ் முனையத்தில் பரபரப்பு
/
ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் கலாசிபாளையா பஸ் முனையத்தில் பரபரப்பு
ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் கலாசிபாளையா பஸ் முனையத்தில் பரபரப்பு
ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் கலாசிபாளையா பஸ் முனையத்தில் பரபரப்பு
ADDED : ஜூலை 24, 2025 04:49 AM

கலாசிபாளையா : கலாசிபாளையா பி.எம்.டி.சி., முனையத்தில் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு நகரில் கே.ஆர்.மார்க்கெட், கலாசிபாளையா பகுதிகள் எப்போதும் பரபரப்பாக இருக்கும். கலாசிபாளையாவில் புதிதாக கட்டப்பட்ட பி.எம்.டி.சி., பஸ் முனையம் 2023ம் ஆண்டு திறக்கப்பட்டது.
இந்த முனையத்தில் இருந்து, நகரின் பல இடங்களுக்கு பி.எம்.டி.சி., பஸ்களும், ராம்நகர், சிக்கபல்லாபூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களும் இயக்கப்படுகின்றன.
பஸ் முனையத்தில் வெளியில் இருந்து, ஆந்திராவின் பல ஊர்களுக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ் முனையத்தை சுற்றி ஏராளமான டிராவல்ஸ் நிறுவனங்களும் உள்ளன. இதனால் பஸ் முனையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.
சாக்கு பை இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு பஸ் முனையத்தில் உள்ள கழிப்பறைக்கு, கையில் பிளாஸ்டிக் சாக்கு பையுடன் ஒருவர் வந்தார். இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிவிட்டு, கையில் கொண்டு வந்த பிளாஸ்டிக் சாக்கு பையை, வெளியே இருந்த மேஜை மீது வைத்து விட்டுச் சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் பையை வைத்துச் சென்றவர் திரும்பி வராததால், கழிப்பறையை பராமரிப்பவர் உள்ளே சென்று பார்த்தபோது யாருமே இல்லை. சாக்கு பையை கொண்டு வந்த நபர், தப்பிச் சென்றது தெரிந்தது.
கழிப்பறை பராமரிப்பவர், அந்த பையை குலுக்கி பார்த்தபோது, ஏதோ வித்தியாசமாக சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக கலாசிபாளையா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து சாக்கு பையை திறந்து பார்த்தபோது, அதற்குள் ஆறு ஜெலட்டின் குச்சிகள், சில டெட்டனேட்டர்கள் இருந்தன.
மோப்ப நாய் அதிர்ச்சி அடைந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த நிபுணர்கள், மெட்டல் டிடெக்டரை வைத்து, பஸ் முனையத்தை சுற்றி சோதனை நடத்தினர். மோப்ப நாயை வைத்து சோதனை நடத்தப்பட்டது. சந்தேகம்படும்படியாக எதுவும் சிக்கவில்லை. ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஸ் முனையத்திற்கு வந்த மேற்கு மண்டல டி.சி.பி., கிரிஷ், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களிடம் இருந்து, தகவலை பெற்றுக் கொண்டார். சிக்கபல்லாபூரில் உள்ள கல்குவாரிகளில் பாறைகளை தகர்க்க, ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
அங்கு கொண்டு செல்வதற்காக யாராவது எடுத்து வந்திருக்கலாம் என்று, போலீசார் கருதுகின்றனர்.
யார் கொண்டு வந்தனர் என்பதை கண்டுபிடிக்க, பஸ் முனையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும், போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கலாசிபாளையாவில் நேற்று பரபரப்பு நிலவியது. பயணியர் பீதி அடைந்தனர்.