/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.38 கோடி கோகைனுடன் கானா நாட்டு பெண் கைது
/
ரூ.38 கோடி கோகைனுடன் கானா நாட்டு பெண் கைது
ADDED : மார் 20, 2025 04:07 AM
பெங்களூரு: மேற்கு ஆசிய நாடான கத்தாரின் தலைநகர் தோஹாவில் இருந்து கர்நாடக மாநிலம், பெங்களூரு, தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் விமானம் ஒன்று தரையிறங்கியது.
அந்த விமானத்தில் பயணி ஒருவர் போதை பொருள் கடத்தி வருவதாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்தது.
ஒரு பெண் பயணி மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அந்த பயணியை தனியாக அழைத்து சென்று சோதனையிட்ட போது, 3.20 கிலோ கோகைன் சிக்கியது. அதன் மதிப்பு 38.40 கோடி ரூபாய்.
கத்தாரில் இருந்து கடத்தி வந்து, பெங்களூரில் விற்பனை செய்ய அந்த பெண் திட்டமிட்டது தெரிய வந்தது. விசாரணையில் அவர், மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டை சேர்ந்த ஜெனிபர் அபே, 44, என்பது தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.