/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பிளாஸ்டிக் காயின்' விழுங்கிய சிறுமி பலி
/
'பிளாஸ்டிக் காயின்' விழுங்கிய சிறுமி பலி
ADDED : பிப் 24, 2026 06:56 AM
மங்களூரு: தாயம் விளையாடும் போது பிளாஸ்டிக் காயினை விழுங்கிய எட்டு வயது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்தார்.
மங்களூரு அருகே உள்ள உல்லாலில் உள்ள கோல்யா கிராமத்தில் வசிக்கும் ராஜேஷின் மகள் தனுஷ்கா, 8. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் 'தாயம்' விளையாடி கொண்டிருந்தார். அப்போது, பிளாஸ்டிக் காயின்களை வாயில் வைத்து கடித்து கொண்டிருந்தார். அச்சமயத்தில், எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக் காயினை முழுங்கிவிட்டார். இதனால், தனுஷ்காவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையறிந்த, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது வயிற்றில் இருந்த காயினை எடுக்க மருத்துவர்கள் போராடினர். இருப்பினும், மூச்சு விட முடியாமல் திணறிய சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே உயிரிழந்தார். இச்சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

