ADDED : ஏப் 15, 2026 03:20 AM

அ நிறம் | அளவு
சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், ஹெப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி வேலை செய்யும் பெற்றோரின் மகள் புட்டா கந்தம்மா லேக்னா, 10. கோடை விடுமுறை என்பதால் புட்டா கந்தம்மா லேக்னா, வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் காலை பெற்றோர் பணிக்கு சென்றனர். வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தார். பணி முடித்து மாலை வீடு திரும்பிய பெற்றோர், மகள் சேலையில் கழுத்து சிக்கிய நிலையில் மயங்கி கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர்.
மகளை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். தகவல் அறிந்த சிக்கமகளூரு ரூரல் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.
ஊஞ்சல் விளையாடும் போது, சேலை முதலில் காலில் சிக்கி, பின் கழுத்தை நெரித்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
