தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பழச கொடுங்க... புதுச வாங்குங்கள் கோ - ஆப்டெக்சில் அதிரடி 'ஆபர்!'

பழச கொடுங்க... புதுச வாங்குங்கள் கோ - ஆப்டெக்சில் அதிரடி 'ஆபர்!'

பழச கொடுங்க... புதுச வாங்குங்கள் கோ - ஆப்டெக்சில் அதிரடி 'ஆபர்!'


UPDATED : அக் 10, 2026 04:27 AM

ADDED : அக் 09, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 04:27 AM ADDED : அக் 09, 2026 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பசவனகுடி: கோ - ஆப்டெக்சில் பட்டு புடவை எக்ஸ்சேஞ்ச் திருவிழா நடக்கிறது. பழைய பட்டு புடவைகளை கொடுத்து, புதிய புடவைகளை வாங்கி கொள்ளலாம்.

கோ - ஆப்டெக்ஸ் பெங்களூரு மண்டல மேலாளர், வி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

பெங்களூரு பசவனகுடி காந்தி பஜாரில் உள்ள கோ - ஆப்டெக்சில் தீபாவளியை முன்னிட்டு, பழைய பட்டு புடவைகளை கொடுத்து புதிய பட்டு புடவைகளை வாங்கி கொள்ளும், பட்டு புடவை எக் ஸ்சேஞ்ச் திருவிழா, கடந்த 7ம் தேதி துவங்கியது. வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய வெள்ளி ஜரிகை பட்டு புடவைகளை கொடுத்து, அவற்றின் மதிப்புக்கு ஏற்றார்போல புதிய பட்டு புடவைகள் அல்லது பிற துணிகளை வாங்கி கொள்ளலாம். தீபா வளிக்காக புதிய வண்ணங்கள், வடிவமைப்புகளில் பட்டு புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தீபாவளியை முன்னிட்டு 30 சதவீத தள்ளுபடி விலையில் துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, கோ - ஆப்டெக்ஸ் திறந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேவைப்படுவோர், 81242 63646 என்ற மொபைல் போன் எண்ணில் அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us