தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சொத்துக்காக தந்தையை கொன்றாரா மகள்? உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

சொத்துக்காக தந்தையை கொன்றாரா மகள்? உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

சொத்துக்காக தந்தையை கொன்றாரா மகள்? உடலை தோண்டி எடுத்து பரிசோதனை


UPDATED : அக் 10, 2026 04:33 AM

ADDED : அக் 09, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 04:33 AM ADDED : அக் 09, 2026 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு: சொத்துக்காக, தந்தையை மகளே, தன் காதலருடன் சேர்ந்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தந்தையின் உடலை தோண்டி எடுத்துள்ள போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் கொட்டியாரா கிராசில் வசித்தவர் ஆல்பர்ட் ரேகோ, 60. இவருக்கு நான்கு பிள்ளைகள். சில ஆண்டுகளுக்கு முன், இவரது மனைவி இறந்து விட்டார். நான்கு பிள்ளைகளுக்கும், ஆல்பர்ட் ரேகோ ஏராளமான சொத்து சேர்த்து வைத்துள்ளார்.

மர்ம சாவு



மூன்று பிள்ளைகள், துபாயில் வசிக்கின்றனர். கடைசி மகள் மாயா, 28, என்பவருடன், ஆல்பர்ட் ரேகோ வசித்து வந்தார். கடந்த ஜூலை 19ம் தேதியன்று, ஆல்பர்ட் ரேகோ சந்தேகத்துக்கு இடமாக உயிரிழந்தார்.

இது பற்றி தன் உறவினர்களுக்கோ, அக்கம், பக்கத்தினருக்கோ, தன் உடன் பிறந்தவர்களுக்கோ தகவல் தெரிவிக்காத மாயா, தந்தையின் உடலை அவசரமாக, தெரேபைல் சர்ச்சின் மயானத்தில் அடக்கம் செய்தார்.

தந்தை இறந்த பின், மாயாவின் நடவடிக்கை மாறியது. தந்தையை இழந்த சோகம் சிறிதும் தென்படவில்லை. மகிழ்ச்சியுடன் காதலருடன் சுற்றினார். இதை கவனித்த ஆல்பர்ட் ரேகோவின் நெருக்கமான நண்பர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர்கள் மங்களூரின் உர்வா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தந்தை கொலை



புகாரில், 'ஆல்பர்ட் ரேகோ, தன் நான்கு பிள்ளைகளுக்கும், சமமாக சொத்துக்களை எழுதி வைத்திருந்தார். ஆனால் மாயா, அந்த பத்திரங்களை கிழித்து போட்டு விட்டு, தந்தையை பலவந்தப்படுத்தி, அனைத்து சொத்துகளையும் தன் பெயருக்கு எழுதி கொண்டார்.

'தந்தையின் உடல் நிலை பாதித்த போது, வீட்டின், 500 மீட்டர் தொலைவில் மருத்துவமனை இருந்தும், அங்கு அழைத்து செல்லாமல், 5 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு, அழைத்து சென்று, தந்தை இறந்ததை உறுதி செய்து கொண்டார்.

'மாயாவே, தன் காதலருடன் சேர்ந்து, தந்தையை கொலை செய்திருக்கலாம். இதுபற்றி, போலீசார் விசாரணை நடத்த வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.

புகாரின்படி போலீசார், ஆல்பர்ட் ரேகோவின் அக்கம், பக்கத்து வீட்டினரிடம் விசாரித்த போது, அவர்களும் சந்தேகம் தெரிவித்தனர்.

எனவே உயர் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று, ஆல்பர்ட் ரேகோவின் உடலை, நேற்று முன் தினம் தோண்டி எடுத்தனர். தாசில்தார் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் முன்னிலையில், உடலின் மாதிரிகளை சேகரித்தனர். இவற்றை ஹைதராபாதின் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us