/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவு: எம்.பி.பாட்டீல்
/
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவு: எம்.பி.பாட்டீல்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவு: எம்.பி.பாட்டீல்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவு: எம்.பி.பாட்டீல்
ADDED : ஆக 26, 2025 02:58 AM

பெங்களூரு: நடப்பாண்டு பிப்ரவரியில் நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு, கர்நாடக அரசு 100 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. முந்தைய பா.ஜ., அரசை விட, காங்கிரஸ் 25.77 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டுள்ளது.
இது குறித்து, தொழிற் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது:
நடப்பாண்டு பிப்ரவரியில், பெங்களூரின் அரண்மனை மைதானத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதற்காக மாநில அரசு 100 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. முந்தைய பா.ஜ., அரசில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு, 74.99 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இம்முறை கூடுதலாக 25.77 கோடி ரூபாய் செலவானது.
மாநாடு நடந்த இடத்துக்கு வாடகைக்காக 2.12 கோடி ரூபாய், விளம்பரத்துக்கு 21.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. மாநாட்டை முன்னிட்டு, வெளிநாடுகளில் நடந்த, 'ரோடு ஷோ'க்களுக்கு 5.58 கோடி ரூபாய், சென்னை, மும்பை, டில்லியில் நடந்த ரோடு ஷோக்களுக்கு, முறையே 52.13 லட்சம், 64.21 லட்சம், 36.26 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு 37.90 லட்சம் ரூபாய் செலவானது.
மாநாட்டில் உணவு வசதிக்காக 2.72 கோடி ரூபாய், நினைவு பரிசுகளுக்கு 46.77 லட்சம் ரூபாய், கடித போக்குவரத்து மற்றும் கணக்கு தணிக்கைக்கு, 4.72 லட்சம் ரூபாய், வாகன போக்குவரத்து வசதிக்கு 1.52 கோடி ரூபாய், ஹோட்டல் அறைகளுக்கு 97.87 லட்சம் ரூபாய், முன்னேற்பாடு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய, 81.96 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.