sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆக., 1ல் மல்லேஸ்வரத்தில் 'கோ பால்ஸ்' இசை நிகழ்ச்சி

/

ஆக., 1ல் மல்லேஸ்வரத்தில் 'கோ பால்ஸ்' இசை நிகழ்ச்சி

ஆக., 1ல் மல்லேஸ்வரத்தில் 'கோ பால்ஸ்' இசை நிகழ்ச்சி

ஆக., 1ல் மல்லேஸ்வரத்தில் 'கோ பால்ஸ்' இசை நிகழ்ச்சி


ADDED : ஜூலை 24, 2025 06:41 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : நாட்டு மாடுகள் இனத்தை ஆதரிக்கும் நோக்கில், 'கோ பால்ஸ்' இயக்கத்தின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'செவன் ஜி பார் எ சக்ஸஸ்புல் லைப்' என்ற தலைப்பில், புகழ்பெற்ற ஹரிகதா கலைஞர் விஷாகா ஹரி, ஆன்மிகமும், இசையும் ஒருங்கிணைந்த ஓர் அரிய நிகழ்வை நிகழ்த்துகிறார்.

ஆகஸ்ட் 1ம் தேதி மாலை 5:30 மணிக்கு, பெங்களூரு மல்லேஸ்வரம் சவுடய்யா மெமோரியல் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் துவக்கி வைக்கிறார்.

'பால-கோகதாம்ருதம்' மற்றும் 'கோகதாம்ருதம்' எனும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

இவை, நாட்டுப்பசுவின் பாரம்பரியம், கிராமிய வாழ்க்கை, பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கின்றன.

இந்த இசை நிகழ்ச்சி, 'கோ பால்ஸ்' இயக்கத்தின் 'மியூசிக் 2 ஹீல்' முயற்சியின் ஒரு பகுதியாகும்.

விவசாயம், இயற்கை மருத்துவம் மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இந்த இயக்கம், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில், 1,000க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.

இதற்கான டிக்கெட்டுகள், 'புக் மை ஷோ' என்ற இணையதளத்தில் கிடைக்கும். 81486 94359, 97426 21242, 99667 38644 என்ற மொபைல் எண்ணிலும், www.wegopals.com என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

இயற்கை விவசாயிகளை காக்கும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us