/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'எங்கேயாவது போய் செத்துவிடு என்பது தற்கொலைக்கு துாண்டுதல் ஆகாது'
/
'எங்கேயாவது போய் செத்துவிடு என்பது தற்கொலைக்கு துாண்டுதல் ஆகாது'
'எங்கேயாவது போய் செத்துவிடு என்பது தற்கொலைக்கு துாண்டுதல் ஆகாது'
'எங்கேயாவது போய் செத்துவிடு என்பது தற்கொலைக்கு துாண்டுதல் ஆகாது'
ADDED : ஏப் 19, 2025 05:21 AM
பெங்களூரு: 'எங்கேயாவது போய் செத்து விடு' என்று சொல்வது தற்கொலை துாண்டுதல் ஆகாது என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், பெண் தற்கொலை செய்த வழக்கில் 3 பேரை விடுவிடுத்தது.
ஹாவேரி ஹிரேகெரூர் டவுனை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுதா. இவர், தன் தாத்தா ராமப்பா வீட்டில் வசித்துவந்தார்.
2017ம் ஆண்டு பேத்தியிடம் வீட்டை காலி செய்யும்படி தாத்தா கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
“வீட்டில் இருந்து போக சொன்னால், நான் எங்கு செல்வது?” என்று சுதா கேட்டுள்ளார். “எங்கேயாவது போய்செத்துவிடு” என்று ராமப்பா கூறிஇருக்கிறார்.
மனமுடைந்த சுதா மண்ணெண்ணெயை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல்கருகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.
நாகராஜ் அளித்த புகாரில் சுதாவை தற்கொலைக்கு துாண்டியதாக, ராமப்பா, அவரது மகன் சுரேஷ், மருமகள் ஸ்வரூபா மீது ஹிரேகெரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஹாவேரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2022ல் தீர்ப்பு கூறிய நீதிமன்றம், வழக்கிற்கு போதிய சாட்சி இல்லை என்றுகூறி மூன்று பேரையும்விடுவித்தது.
இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பசவராஜ் விசாரித்து வந்தார். மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், இறந்தவரிடம் இறக்க சொன்னார்கள் என்ற அரசு தரப்பு வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இந்த வாதத்தில் குற்றவியல் நோக்கம் எதுவுமே இல்லை.
'எங்கேயாவது போய் செத்துவிடு' என்று சொல்வது, தற்கொலைக்கு துாண்டுவது ஆகாது. உயிரிழந்தவர் உடலில் 95 சதவீத தீக்காயம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறி உள்ளது. உயிரிழந்தவர் வாக்கு மூலம் அளிக்க தகுதியானவரா என்று மருத்துவ அதிகாரி விளக்கம் அளிக்கவில்லை.
இறந்தவரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய, தாசில்தாரிடம் அனுமதி கோரியதாக விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் கூறினார். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கின் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை. இதனால் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரும், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

