sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் மஹிஷாசுரமர்த்தினி தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் மஹிஷாசுரமர்த்தினி அம்மன்

/

தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் மஹிஷாசுரமர்த்தினி தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் மஹிஷாசுரமர்த்தினி அம்மன்

தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் மஹிஷாசுரமர்த்தினி தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் மஹிஷாசுரமர்த்தினி அம்மன்

தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் மஹிஷாசுரமர்த்தினி தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் மஹிஷாசுரமர்த்தினி அம்மன்


ADDED : செப் 23, 2025 04:56 AM

Google News

ADDED : செப் 23, 2025 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த தேவி, மஹிஷாசுரமர்த்தினி என அழைக்கப்படுகிறார். துர்கை அம்மனின் மற்றொரு வடிவமாக கருதப்படுகிறார். கோவிலில், தேவியின் சிலை மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுகிறது. தேவிக்கு ஆறு கைகள் உள்ளன. இதை பார்க்கும் போது வீரம், வலிமை என இரண்டும் நொடிப்பொழுதில் கிடைக்கிறது. ஒரு விநாடி தரிசித்தால் பார்த்து கொண்டே இருக்கலாம் என தோன்றுகிறது. தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு பெற பக்தர்கள் வேண்டுகின்றனர்.

இந்த கோவில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இன்றும் கோவிலில் பாண்டிய மன்னர்களின் கல்வெட்டு உள்ளது.

இது, 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு என கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, ஹொய்சாளர், பாண்டியர், விஜயநகர பேரரசு போன்ற பலரது கட்டுப்பாட்டிலும் கோவில் இருந்து உள்ளது.

இந்த கோவிலின் வரலாறு மிக நீண்டது. கோவில் 10ம் நூற்றாண்டை சேர்ந்து இருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

கட்டட கலை கோவில் பாரம்பரிய கர்நாடக தேவாலய கட்டட கலையில் கட்டப்பட்டு உள்ளது. மரச்சிற்பங்களும், கல்வெட்டுகளும், செம்பு கலசங்களும் உள்ளன. கோவிலின் உள்வாசலில் இருந்து முகமண்டபம், கருவறை வரை அனைத்தும் அழகிய சிற்பங்களாக காட்சி அளிக்கின்றன.

இந்த கோவிலில், நவராத்திரி பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அப்போது, ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் பாஞ்சாமிர்த அபிஷேகம், நைவேத்தியம், மஹா மங்களாரத்தி ஆகியவை அம்பாளுக்கு செய்யப்படுகின்றன.

கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் மனதிற்கு இதமாக உள்ளன.அமைதி, நதிநீர் ஓசை, பறவைகளின் குரல்கள் என அனைத்தும் நிம்மதியான அனுபவத்தை தருகின்றன. கோவில் காலை 7:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும், மாலை 4:30மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us