sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வளர்ந்த இந்தியா இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம்

/

வளர்ந்த இந்தியா இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம்

வளர்ந்த இந்தியா இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம்

வளர்ந்த இந்தியா இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம்

1


UPDATED : பிப் 01, 2026 04:05 PM

ADDED : பிப் 01, 2026 03:06 PM

Google News

1

UPDATED : பிப் 01, 2026 04:05 PM ADDED : பிப் 01, 2026 03:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. வளர்ச்சி நிறைந்த இந்தியாவுக்கான பயணத்தில் இந்த பட்ஜெட் வலுசேர்க்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கானது. பட்ஜெட்டில் பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட் உள்ளது. பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் உள்ளது. நாட்டின் தொழில்துறையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.

முக்கியத்துவம்

140 கோடி மக்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வளர்ச்சி நிறைந்த இந்தியா என்ற பயணத்திற்கு வலுசேர்க்கும். மருத்துவம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது பாராட்டுக்குரியது.

பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது, இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறப்போகிறது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும். நாட்டு மக்களின் தொழில் திறனை வளர்ப்பதற்கு நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளார்.

எதிர்காலம்

பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட், 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்திற்கான அடித்தளமாகும். பட்ஜெட் இந்தியாவின் பொன்னான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. வடகிழக்கு பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.






      Dinamalar
      Follow us