மத்திய பட்ஜெட் 2026; விலை இறங்க வாய்ப்புள்ள பொருட்களின் முழு பட்டியல் இதோ!
மத்திய பட்ஜெட் 2026; விலை இறங்க வாய்ப்புள்ள பொருட்களின் முழு பட்டியல் இதோ!
UPDATED : பிப் 01, 2026 04:04 PM
ADDED : பிப் 01, 2026 03:08 PM

புதுடில்லி: மத்திய பட்ஜெட் 2026ன் எதிரொலியாக பல்வேறு பொருட்களின் விலைகள் குறைகிறது. அதே போல சில பொருட்களின் விலைகளும் உயருகிறது.
ஏற்கனவே அறிவித்தபடி, மத்திய பட்ஜெட் 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். முற்பகல் 11 மணிக்கும் தொடங்கிய பட்ஜெட் உரை நண்பகல் 12.20க்கு நிறைவு பெற்றது. பாதுகாப்புத்துறைக்கு கடந்தாண்டை காட்டிலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போல, வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு அறிவிப்புகளும் இடம்பெற்று உள்ளன. பட்ஜெட் அறிவிப்பின் எதிரொலியாக, விலை ஏறும் மற்றும் விலை குறையும் பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்;
விலை குறையும் பொருட்கள்;
* 17 வகையான மருந்துகள்(நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கானது)
*கடல் உணவு
*தோல் பொருட்கள்
*ஸ்மார்ட் போன்கள்/டேப்லெட்டுகள்(Tablets)
*மின்வாகன(EV) பேட்டரிகள்
*சூரியஒளி மின்கலன்கள்
*மைக்ரோவேவ் ஓவன்
*விளையாட்டு உபகரணங்கள்
*தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் மின்னணு பொருட்கள்

