/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு தங்கப்பதக்கம்
/
பி.இ.எம்.எல்., தொழிற்சாலைக்கு தங்கப்பதக்கம்
ADDED : செப் 09, 2025 05:05 AM

பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்த ஏற்றுமதிக்கான இ.இ.பி.சி., எனும் இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தங்க விருது, பி.இ.எம்.எல்., எனும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்க்கு கிடைத்துள்ளது.
இ.இ.பி.சி.,யின் பிளாட்டினம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக டில்லியில் நேற்று சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பொது நிறுவனங்கள் பிரிவில் பி.இ.எம்.எல்., நிறுவனத்திற்கு தங்க விருதை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், பி.இ.எம்.எல்., தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சாந்தனு ராயிடம் வழங்கினார்.
இதை தங்கவயல், பெங்களூரு, மைசூரு நகரங்களில் உள்ள பி.இ.எம்.எல்., தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கொண்டாடினர்.
- நமது நிருபர் -