/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கச்சுரங்கத்தில் மீண்டும் தங்கம் காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா கேள்வி
/
தங்கச்சுரங்கத்தில் மீண்டும் தங்கம் காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா கேள்வி
தங்கச்சுரங்கத்தில் மீண்டும் தங்கம் காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா கேள்வி
தங்கச்சுரங்கத்தில் மீண்டும் தங்கம் காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா கேள்வி
ADDED : ஜூலை 16, 2025 08:19 AM
தங்கவயல் :''மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் இல்லாமல், தங்கச்சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பே இல்லை,'' என, தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா திட்டவட்டமாக தெரிவித்தார்.
அண்மை காலமாக சில 'டிவி', சமூக வலைதளங்களில் தங்கச்சுரங்கத்தில் மீண்டும் தங்கம் எடுக்கும் பணியை துவங்கப் போவதாகவும், இதனால், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல் பரப்பப்படுகிறது.
இது உண்மையா என்ற கேள்வி, தங்கச் சுரங்க முன்னாள் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அளித்த பேட்டி:
மீண்டும் தங்கச் சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் வேலையை, மத்திய அரசே துவங்குவதாக இருந்தால், அரசே அதை வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும்.
தனியார் நடத்துவதாக இருந்தால் டெண்டர் விட வேண்டும். கர்நாடக அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். அதுபோன்று எதுவும் நடக்கவில்லை.
கோல்டு மைன்ஸ் தொழிலாளர் நிலுவைத் தொகை பிரச்னைகள் கிடப்பில் உள்ளன. வீடுகளை சொந்தம் ஆக்கும் திட்டமும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதெல்லாம் தீர்வுக்கு வந்த பின்னரே, தங்கச் சுரங்கத்தில் தங்கம் எடுப்பதா அல்லது கொட்டி வைத்துள்ள 30 மில்லியன் டன் சயனைட் மண்ணில் கிடக்கும் தங்கத்தை சுத்திகரிப்பு மூலம் எடுப்பதா என்பது தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோலார் தொகுதி ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு அளித்த பேட்டி:
தங்கவயல் தங்கச் சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் தொழில் ஆரம்பிக்கப்படுவதன் மூலம், பல பிரச்னைகளுக்கு முடிவு கிடைத்துவிடும்.
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். 1,000 கோடி ரூபாய் மதிப்பில் சயனைட் மண்ணில் தங்கம் எடுக்கப்படும். இதற்கான டெண்டர் பணிகளை எஸ்.பி.ஐ., நிறுவனம் முன் நின்று நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.