ADDED : ஜூலை 30, 2025 07:47 AM
தேர்தல் நடக்குமா?
மு னிசி., கவுன்சிலின் ஆயுள், வரும் அக்டோபரில் முடிவடையுது. அடுத்த தேர்தல் நடத்தப்படுமா அல்லது கேபிடல் சிட்டி மாநகராட்சி போல தேர்தலே நடத்தாமல் காலம் தள்ளிடுவாங்களா?
ஏற்கனவே, இப்படி தான் ஜி. பஞ்சாயத்து, தா. பஞ்சாயத்து தேர்தலையே நடத்தல. அதனால் முனிசி., கவுன்சிலுக்கும் தேர்தல் நடக்குமா என்பதும் 'டவுட்' தானாம்.
ஏற்கனவே முனிசி., அதிகாரம் முழுமையா அசெம்பிளிக்காரர் ரிமோட் கன்ட்ரோலில் தான் 'ரோபோ' அதிகாரத்தில் இருப்பதாக 35 வார்டுகளிலுமே பேச்சு நடமாடுது.
முனிசி., தேர்தலுக்கு முன்பு உறுப்பினராக இருந்தவங்க, மீண்டும் முனிசி., கவுன்சிலுக்கு நுழைய பழையவர்கள், புதியவர்கள், தங்களை தயார்படுத்தும் வேலையில் வார்டுகளில் நகர் வலம் வந்தவாறு இருக்காங்க. தேர்தல் நடத்தணுமே... இப்பவே சிலர் பல 'எல்' செலவு செய்துள்ளதாக தெரிகிறது.
புரோக்கர்கள் அட்டகாசம்!
கோ ல்டு சிட்டி நகராட்சியில் மேஜைக்கு மேஜை புரோக்கர்கள் அட்டகாசம் ஓவராக இருக்குதாம். இவர்களை தடுத்தால் எல்லாமே சரியாகி விடுமென ஸ்டேண்டிங் குழுத் தலைவரே புதிய ஆபீசருக்கு போட்டுக் கொடுத்திருக்கிறார்.
அவர் ஏற்கனவே, ஸ்பை வேலை பார்த்து லோக் ஆயுக்தாவுக்கு போட்டுக்கொடுத்து பெண் ஆணையரை வீட்டுக்கு அனுப்பி வெச்சாரு. அதனால் புதுசா பதவிக்கு வந்தவரும் இவரை புரிஞ்சிக்க வேணும். தெரிஞ்சிக்க வேணும். 50 சதவீதம் பெண்கள் கவுன்சிலுக்கு தேர்வாகி இருப்பதால், இவர்களை சார்ந்தவங்க தான் 'ஜெராக்ஸ்' என்று வெல்லமாக அழைக்கிறாங்க.
புரோக்கர்கள் என்று இவர் கூறும் ஜெராக்ஸ்கள் யார் என்ற கேள்வி எழுந்திருக்குது. புரோக்கர்கள் யார் யார் என லிஸ்ட் தயார் செய்து சொன்னவர் அடையாளம் காட்டி வெளியிட்டால் ஆபீசர்களுக்கு முன் ஜனங்களும் தெரிஞ்சிக்குவாங்க.
கதவை தட்டும் கமிஷன்?
ச ட்டப் பிதா பவன் 10 ஏக்கர்ல 10 கோடியில கட்டப்போறாங்க. 40 பர்சன்ட் கமிஷன் வீட்டு கதவை தட்டப்போகுதாம். எப்போதும் இல்லாத 'பம்பர்' கமிஷன் 'கிப்ட்' அள்ளுவதாக விபரம் தெரிந்தவங்க கணக்கு பார்க்குறாங்க.
ஊரெல்லாம் வெளிச்சம் காட்ட, எரிய வைத்த லைட்டுகளுக்கு 20 சி ஆனதாக சொல்றாங்க. இதுக்கு முனிசி., பேர்ல தான் கணக்கு. இதன் பர்சன்டேஜ் முனிசி., தலைவி கவனத்துக்கே போகலயாம். இதுவும் அசெம்பிளியோட ஜெராக்ஸ் வீட்டுக்கு போனதாக வீதியில் எரிகிறது விமர்சனங்கள்.
ஒருவேளை முனிசி., தேர்தலை நடத்த அரசு முன் வந்தால், 35ல் 30 வார்டுகளை கைக்காரர்களை ஜெயிக்க வைக்க ஒவ்வொரு வார்டிலும் தலா 3 பேரை தயார் செய்திருக்காங்க.
ஜெயிக்கிறவங்க வெறும் கையெழுத்து போடும் மிஷினா இருக்க போறாங்க. இதற்கான எல்லா செலவையும் அசெம்பிளிக்காரரே கவனிச்சிக்குவாருன்னு சொல்றாங்க.
உதிரியாக மாறிய தாமரை!
இ தற்கு முன்பு இருந்த கோல்டன் தொகுதி பூக்கார அசெம்பிளிக்காரர் 100 ஏக்கரை விழுங்கிட்டதா ஜனங்க கண்ணடி படவே, மீண்டும் எழ முடியாமல் ரெண்டு எலக் ஷனில் அவரை படுக்க வெச்சிட்டாங்க.
அசெம்பிளி தேர்தல்ல கூட ஆளும் கட்சி பணம் பூக்காரருக்கு கைமாறினதால் தான் சைலண்ட் ஆகிவிட்டதாக பேசப்பட்டது. அப்படியெல்லாம் நடக்கவே இல்லை. இதெல்லாம் கட்டுக் கதை என்றாங்க.
இருந்தாலும், எதிரியான கைக்காரரிடமே ஒரு 'சி'யை வாங்கிக்கொண்டு கூட்டுறவு வங்கி தேர்தல்ல போட்டியில் இருந்து வாபஸ் ஆனதா சொல்றாங்களே... இதுவும் கப்சாவா.
பூக்கார மேலிடமும் இதன் பேர்ல சின்ன ஆக் ஷனும் எடுக்கலயே ஏன்? கிடைச்ச வரை சுருட்டிக்க விட்டுட்டாங்களா? ஊழலில் மட்டுமே ரொம்ப ஒற்றுமையா தான் இருக்காங்க. இவர்களுக்குள் எதிர்ப்பே இல்லை போல.
முனிசி.,யில் 35ல் பூக்காரங்க 3 பேர் இருந்தாங்க. அதிலும் 3 பேருமே அவங்க சொந்த செல்வாக்கு தான் அவர்களை ஜெயிக்க வெச்சதாம்.
அடுத்த முனிசி., தேர்தல்ல பூ கட்சியில் போட்டியிட சீட் கேட்பதில் போட்டி இருக்குமா என்பதே சந்தேகம் தானாம்.
செல்வாக்கு மிகுந்த தாமரை இப்படி உதிரிப்பூவா மாறிடுச்சே.