/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயல் பேராசிரியர் கணேஷ் நுால் அந்தமானில் வெளியீடு
/
தங்கவயல் பேராசிரியர் கணேஷ் நுால் அந்தமானில் வெளியீடு
தங்கவயல் பேராசிரியர் கணேஷ் நுால் அந்தமானில் வெளியீடு
தங்கவயல் பேராசிரியர் கணேஷ் நுால் அந்தமானில் வெளியீடு
ADDED : ஜூன் 05, 2025 11:35 PM

தங்கவயல் பேராசிரியர் பெ.கணேஷ் எழுதிய 'தமிழ் இலக்கியங்களில் சமூக மானிடவியல்' என்ற நுால் அந்தமான் தமிழர் சங்கத்தில் வெளியிடப்பட்டது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் இணைந்த அந்தமான் தமிழர் சங்கம் பல்வேறு தமிழறிஞர்கள் எழுதிய நுால்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கம். இந்த வகையில், இம்மாதம் 3 ம் தேதி அந்தமான் தமிழர் சங்கத்தில் நடந்த நிகழ்வில், அதன் தலைவர் லி.மூர்த்தி, பேராசிரியர் பெ.கணேஷ் எழுதிய 'தமிழ் இலக்கியங்களில் சமூக மானிடவியல்' என்ற நுாலை வெளியிட்டார்.
இந்த நுால், 288 பக்கங்கள். அவ்வை கோட்டம், திருவையாறு தமிழ் அய்யா பதிப்பகத்தார் வெளியிட்டனர்.
விழாவுக்கு துணைத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், செயலர் வே.காளிதாசன், பொருளாளர் இ.முத்து இருளன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் இரா.அழகர்சாமி, கா.முருகேசன், காட்டு ராசன், இரா.முருகன், சி.கருணாநிதி, பா.முருகன், மருது பாண்டியன், ஐ.பாலகணேசன், அ.இப்ராகிம் ஆகியோர் பேசினர்.
பேராசிரியர் பெ.கணேஷ் ஏற்புரை வழங்கினார். 'மேலும் பல இலக்கிய நுால்களை எழுதுவதற்கு உற்சாகம் ஏற்பட்டுள்ளது; எழுத்துப் பணி தொடரும்' என்றார்.
- நமது நிருபர் --