/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயல் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
/
தங்கவயல் வக்கீல்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
ADDED : ஏப் 19, 2025 11:08 PM
தங்கவயல்: நாட்டின் பல நகரங்களில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. இதனை பல்வேறு நகரங்களில் உள்ள வக்கீல்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில், பெங்களூரில் மூத்த வக்கீல் ஒய்.ஆர். சதாசிவ ரெட்டியை அவரது அலுவலகத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தாக்கியுள்ளனர்.
அதே போல், மஹாராஷ்டிராவின் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் பெண் வக்கீல் அம்பஜோகாய் என்பவரையும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்களை கண்டித்து கோலார் மாவட்டத்தில் தங்கவயல் உட்பட 6 தாலுகா நீதிமன்றங்களில் வக்கீல்கள் வழக்குகளுக்கு ஆஜராகாமல் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.