ADDED : மார் 18, 2026 05:37 AM
கோலார்: கோலார் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கமான, 'கோமுல்' உகாதியை ஒட்டி, லிட்டர் பாலுக்கான கொள்முதல் விலையை, 2.0 ரூபாய் உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து கோலார் மாவட்ட கோமுல் சங்கத்தலைவர் கே.ஒய். நஞ்சேகவுடா கூறியதாவது:
பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்படும் லிட்டர் பாலுக்கு இதுவரை, 35.40 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது, 37.40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பசுந்தீவனம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 3,000 ரூபாயாக ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பசுக்களுக்கான காப்பீடு, 70 ஆயிரத்தில் இருந்து, 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பசுந்தீவனம், 40 ரூபாயாக இருந்தது, 100 ரூபாயாக அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கடினமான சூழ்நிலையில் இருந்தனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு லிட்டர் பாலுக்கு, 2.00 கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
