/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராஜா சீட்டில் கண்ணாடி பாலம் திட்டத்தை கைவிட்டது அரசு
/
ராஜா சீட்டில் கண்ணாடி பாலம் திட்டத்தை கைவிட்டது அரசு
ராஜா சீட்டில் கண்ணாடி பாலம் திட்டத்தை கைவிட்டது அரசு
ராஜா சீட்டில் கண்ணாடி பாலம் திட்டத்தை கைவிட்டது அரசு
ADDED : ஆக 17, 2025 10:15 PM
குடகு : பிரசித்தி பெற்ற மடிகேரியின் ராஜா சீட்டில், கண்ணாடி பாலம் கட்டும் திட்டத்தை, மாநில அரசு கைவிட்டுள்ளது.
குடகு மாவட்டம், மடிகேரி தாலுகா சுற்றுலா தலங்கள் நிறைந்துள்ள மலைப்பகுதியாகும். சுற்றுலா பயணியருக்கு விருப்பமான இடங்களில், மடிகேரியும் ஒன்றாகும்.
குறிப்பாக இங்குள்ள ராஜா சீட், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
ராஜா சீட்டில் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், மேம்பாட்டு திட்டங்களை தோட்டக்கலைத்துறை வகுத்துள்ளது. கண்ணாடி பாலம் மற்றும் உணவகம் கட்ட, டெண்டர் அழைத்திருந்தது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடவுள்ளது.
டெண்டர் முடிவாகும் நிலையில், பொது மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். திட்டம் மிகவும் அபாயமானது; தேவையற்றது என, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கண்ணாடி பாலம் கட்ட, டெண்டர் அழைப்பதற்கு முன்பு, நில ஆய்வியல் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் வல்லுநர்களுடன், ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். பல விதங்களில் ஆய்வு செய்திருக்க வேண்டும்.
கண்ணாடி பாலம் கட்ட, அந்த இடம் தகுதியானதா என்பதை, தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் திடீரென திட்டத்தை செயல்படுத்த தயாராவது சரியல்ல என்ற கருத்து எழுந்துள்ளது.
ஏற்கனவே ராஜா சீட்டில், வார இறுதியில் சுற்றுலா பயணியரின் அழுத்தத்தை தாங்க முடியவில்லை. இச்சூழ்நிலையில், கண்ணாடி பாலம் அமைத்தால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருவர்.
இது இயற்கை சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நிலச்சரிவு ஏற்பட்டால், சுற்றுலா பயணியரும் அபாயத்தில் சிக்குவர் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்தனர். எனவே கண்ணாடி பாலம் திட்டத்தை, மாநில அரசு கைவிட்டுள்ளது.