/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனித - விலங்கு மோதலை தடுக்க 8 திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்
/
மனித - விலங்கு மோதலை தடுக்க 8 திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்
மனித - விலங்கு மோதலை தடுக்க 8 திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்
மனித - விலங்கு மோதலை தடுக்க 8 திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்
ADDED : நவ 15, 2025 08:02 AM
பெங்களூரு: கர்நாடகாவில் மனித - வனவிலங்கு மோதலை தடுக்க, எட்டு அம்ச திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகாவில் சமீப காலமாக மனித - வனவிலங்கு மோதலால், மனித உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதை தடுப்பது தொடர்பாக முதல்வர் சித்தராமையா, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, வன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் பேசுகையில், ''வயது முதிர்வு, இளம் புலிகளா ல் தாக்கப்பட்டு காயம் அடையும் வயதான புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். ட்ரோன் கேமராக்கள் மூலம் புலி கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து, உடனடியாக பிடிக்க நட வடிக்கை எடுங்கள்,'' என்றார்.
இதையடுத்து முதல்வரிடம் எட்டு அம்சங்கள் முன்மொழியப்பட்டன. அவற்றுக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தார். எட்டு அம்ச திட்டங்கள் வருமாறு:
மனித - வனவிலங்கு மோதல் நிலவும் பகுதிகளை கண்டறிந்து, அது எந்த மாதிரியான மோதல் என்பதை பட்டியலிட வேண்டும்
மோதலின் கடுமையான அடிப்படையில் அதிகாரிகள், பணியா ளர்களை ஒதுக்குவது
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் ரோந்து பணியை அதிகரிப்பது
மூத்த அதிகாரிகளை கிராம பகுதிகளில் தங்க வைப்பது
வனத்துறையினருடன் இணைந்து செயல்பட விரும்பும் இளைஞர்களை அடையாளம் காண்பது
சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வன ஊழியர்களை பணி அமர்த்துவது
வனவிலங்குகள் தாக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது
வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை உதவியை பெற குழு அமைப்பது.

