தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாலுமரத திம்மக்கா 114 வயதில் மரணம்

 சாலுமரத திம்மக்கா 114 வயதில் மரணம்

 சாலுமரத திம்மக்கா 114 வயதில் மரணம்


ADDED : நவ 15, 2025 08:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 08:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், சாலுமரத திம்மக்கா உடல்நலக்குறைவால் தன், 114 வயதில் மரணம் அடைந்தார்.

கர்நாடகாவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா. 'மரங்களின் தாய்' என்று கர்நாடக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். வயோதிகம், உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாலுமரத திம்மக்கா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 114.

மருத்துவமனையில் இருந்த திம்மக்கா உடலுக்கு, முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார்.

பின், அவர் கூறுகையில், ''திம்மக்காவின் ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு வலியை தாங்கும் சக்தியை கொடுக்கவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அவரது இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் நடக்கும்,'' என்றார்.

துமகூரின் குப்பியில், 1911ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி திமக்கா பிறந்தார். இவரது தந்தை சிக்கரங்கய்யா. தாய் விஜயம்மா. சரியான கல்வி கிடைக்காமல் கல் குவாரியில் தினக்கூலியாக வேலை செய்த திம்மக்கா, மாகடியின் ஹுலிகல் கிராமத்தின் சிக்கய்யாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

பத்மஸ்ரீ விருது குழந்தை இல்லாத குறையை போக்க, மாகடியின் கூடூரில் இருந்து ஹுலிகல் வரை 4 கி.மீ., துாரத்திற்கு திம்மக்காவும், அவரது கணவரும் சேர்ந்து, 385 ஆலமர கன்றுகளை நட்டு பராமரித்தனர்.

இதன் விளைவாக மரங்கள் நன்கு வளர்ந்தன. அதன் பின், மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதை முழு நேர வேலையாக திம்மக்கா செய்தார். கணவர் இறந்த பின், வளர்ப்பு மகன் உமேஷ் உதவியுடன் மரக்கன்றுகள் நட்டார்.

சுற்றுச்சூழல் ஆர்வலரான திம்மக்கா, தன் சொந்த முயற்சியில், மாநிலம் முழுதும், 8,000 மரங்களை நட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தார். இவரது சேவையை கவுரவிக்கும் வகையில், 2019ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ஆசிர்வாதம் கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம், ராஜ்யோத்சவா, தேசிய குடிமக்கள், மகிளா ரத்னா உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ், ஓக்லாந்தின் சுற்றுச்சூழல் அமைப்பு, சுற்றுச்சூழல் கல்வி வளங்களுக்காக, திம்மக்காவின் பெயரை சூட்டி கவுரவித்தது.

தலைவர்கள் இரங்கல் சாலுமரத திம்மக்கா மறைவுக்கு, முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us