/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் ஆம்புலன்ஸ் சேவைக்கு அரசு ஒப்புதல்
/
சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் ஆம்புலன்ஸ் சேவைக்கு அரசு ஒப்புதல்
சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் ஆம்புலன்ஸ் சேவைக்கு அரசு ஒப்புதல்
சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் ஆம்புலன்ஸ் சேவைக்கு அரசு ஒப்புதல்
ADDED : ஜூன் 13, 2025 11:20 PM

பெங்களூரு: தனியார் நிர்வகித்து வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை, சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முடிவுக்கு, கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகாவில் 31 மாவட்டங்களில் நோயாளிகளுக்கு அவசர கால சேவை வழங்கும் வகையில் 715 '108' ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இந்த ஆம்புலன்ஸ்களை தனியார் நிறுவனங்கள் நிர்வகித்து வந்தன.
சில மாவட்டங்களில் அவசர தேவைக்கு அழைக்கும்போது ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் 108 ஆம்புலன்ஸ் சேவையை, சுகாதார துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, '108' ஆம்புலன்ஸ் சேவையை சுகாதார துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் திட்டத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:
இந்த நடவடிக்கை ஆம்புலன்ஸ் சேவையின் செயல்திறனை கணிசமாக அதிகரிக்கும். அரசுக்கு 250 கோடி ரூபாய் மிச்சப்படுத்தும். மாநிலத்தில் 715 ஆம்புலன்ஸ்களை நிர்வகிக்க, மாநில அளவில் கட்டுப்பாட்டு மையம் நிறுவப்படும். இந்த மையம் 112 என்ஜி - இ.ஆர்.எஸ்.எஸ்., என்ற மென்பொருள் மூலம் இயக்கப்படும்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், நர்சிங் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுக்கப்படுவர். அவர்கள் பணி திறமையை பார்த்து, பணி நிரந்தரம் செய்வது பற்றி முடிவு எடுப்போம். பின்தங்கிய மாவட்டமான சாம்ராஜ்நகரில் இருந்து இந்த சேவையை துவங்க நாங்கள் முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.