தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மல்ட்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை கட்ட அரசு ஒப்புதல்

 'மல்ட்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை கட்ட அரசு ஒப்புதல்

 'மல்ட்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை கட்ட அரசு ஒப்புதல்


ADDED : ஜன 19, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மக்களின் நன்மைக்காக, பெங்களூரின் இரண்டு இடங்களில், அனைத்து வசதிகளும் கொண்டுள்ள மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்ட, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதில், அரசு ஆர்வம் காட்டுகிறது. அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் வகுத்து உள்ளது. பெங்களூரில் வசிக்கும் ஏழை நோயாளிகளின் வசதிக்காக, அதி நவீன சிகிச்சை வசதிகள் கொண்ட, இரண்டு மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்ட, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரு நகரின், ஜாலா பேரூராட்சியின், உத்தனஹள்ளி கிராமத்தில், சர்வே எண் - 72ல், ஏழு ஏக்கர் அரசு நிலத்தில், 150 கோடி ரூபாய் செலவில், மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்துக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை. எனவே எலஹங்காவின் பெள்ளஹள்ளியின் ஐந்து ஏக்கர் நிலத்தில், மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று, ஹெப்பால் சட்டசபை தொகுதியின் கால்நடை, மற்றும் விவசாயத்துறை அலுவலக வளாகத்தில், பூபசந்திரா பிரதான சாலையை ஒட்டியுள்ள, நான்கு ஏக்கரில் மற்றொரு மருத்துவமனை கட்டப்படும். இரண்டு இடங்களிலும், தலா 75 கோடி ரூபாய் செலவில், மருத்துவமனை கட்டப்படும். இரண்டிலும் 125 படுக்கைகள் இடம் பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us