/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீசார் தொப்பி மாற்ற அரசு முடிவு
/
போலீசார் தொப்பி மாற்ற அரசு முடிவு
ADDED : ஆக 08, 2025 03:23 AM

பெங்களூரு: கர்நாடகாவில் போலீஸ் ஏட்டு, தலைமை ஏட்டுகள் பயன்படுத்தும் தொப்பிகளின் வடிவத்தை மாற்ற மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
கர்நாடகாவில் போலீஸ் ஏட்டு, தலைமை ஏட்டு ஆகியோர் பிரிட்டிஷ் காலத்தில் பயன்படுத்திய ஒரு பக்கம் சாய்வாக உள்ள தொப்பிகளையே அணிந்து வருகின்றனர்.
இந்த தொப்பிகளை கோடையில் அணியும் போது, அசவுகரியமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதை கருத்தில் கொண்டு, போலீஸ் ஏ ட்டு பயன்படுத்தும் தொப்பியின் வடிவத்தை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா தலைமையில், உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா, புதிய வடிவிலான தொப்பிகளை பயன்படுத்த பச்சைக்கொடி காட்டி உள்ளார்.
இதையடுத்து, இந்த வகை தொப்பிகளை விரைவில் மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. புதிய வடிவ தொப்பியின் வடிவமைப்பு, அவற்றுக்கான டெண்டர் குறித்து ஏ.டி.ஜி.பி., உமேஷ் குமார் தலைமையில் ஆலோசனை நடக்க உள்ளது.
புதிய தொப்பி, தமிழகத்தில் போலீஸ் ஏட்டுகள் பயன்படுத்தும் வகையில் இருக்கும். ஏட்டு, தலைமை ஏட்டுக்கான தொப்பிகள் நீல நிறத்திலும், எஸ்.ஐ.,க்கான தொப்பிகள் காக்கி நிறத்திலும் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.