தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கஸ்துாரிரங்கன் அறிக்கை மீது கள ஆய்வு நடத்த அரசு முடிவு

கஸ்துாரிரங்கன் அறிக்கை மீது கள ஆய்வு நடத்த அரசு முடிவு

கஸ்துாரிரங்கன் அறிக்கை மீது கள ஆய்வு நடத்த அரசு முடிவு


UPDATED : நவ 17, 2026 02:59 AM

ADDED : நவ 16, 2026 10:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 02:59 AM ADDED : நவ 16, 2026 10:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு: கஸ்துாரிரங்கன் அறிக்கையை செயல்படுத்துவது குறித்து கள ஆய்வு நடத்தப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறி உள்ளார்.

நேற்று அவர் அளித்த பேட்டி:

மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பாக கஸ்துாரிரங்கன் அறிக்கையை செயல்படுத்துவது குறித்த மத்திய அரசின் முன்மொழிவை, மாநில அரசு ஏற்கனவே ஆறு முறை நிராகரித்துவிட்டது. இந்த அறிக்கையால் மலை, வன பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், நேரடி கள ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதே ஒரே வழி.

வருவாய் மற்றும் வன அதிகாரிகள் முன்னிலையில் கள ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் எந்த நிலம் எந்தெந்த துறைக்கு வழங்கப்படும் என்பது தெரியவரும். மலைவாழ் மக்கள், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யப்படும்.

முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை மத்திய அரசுக்கு முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை. அதுபோல, ஆய்வில் பல குறைகள் இருந்தன. குறைகளை சரிசெய்து இம்முறை வெளிப்படையான கணக்கெடுப்பு நடக்கும். மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழுவும், மாநில அளவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்ட கண்காணிப்பு குழுவும் உருவாக்கப்படும்.

உண்மையான வனப்பகுதியை கண்டறிவதற்கு ஓராண்டு தேவைப்படும். ஓராண்டுக்குள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us