தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு

 அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு

 அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் தற்காலிகமாக ஒத்திவைப்பு


ADDED : மார் 11, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகா தழுவிய அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக கர்நாடகா அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் ரவீந்திரநாத் மேட்டி கூறி உள்ளார்.

கர்நாடகாவில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 15ம் தேதி வரை மாநிலம் முழுதும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். இப்போராட்டத்தின் போது, அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படும் என கர்நாடகா அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது. இதனால், அரசு மருத்துவமனையை நம்பியிருக்கும் ஏழை, எளியோர் அச்சம் அடைந்தனர்.

இந்நிலையில், மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் ரவீந்திரநாத் மேட்டி, தலைமை செயலர் ஷாலினி, சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பா, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மற்றும் பிற அதிகாரிகளுடன் நேற்று இரவு பேச்சு நடத்தினார்.

இதில், டாக்டர்களின் கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிப்பதாக தெரிவித்து உள்ளது. இதனால், டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, சங்க தலைவர் ரவீந்திரநாத் மேட்டி கூறுகையில், ''மாநில அரசு எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலித்து உள்ளது. எனவே, வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us