sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மக்கள் பிரதிநிதிகள் போன் அழைப்பு அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

/

 மக்கள் பிரதிநிதிகள் போன் அழைப்பு அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

 மக்கள் பிரதிநிதிகள் போன் அழைப்பு அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

 மக்கள் பிரதிநிதிகள் போன் அழைப்பு அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்


ADDED : ஜன 23, 2026 06:00 AM

Google News

ADDED : ஜன 23, 2026 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'அரசின் அனைத்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகள் போனில் தொடர்பு கொண்டால், கட்டாயம் பேச வேண்டும். போனை எடுக்காமல் இருக்க கூடாது' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு தலைமை செயலர் ஷாலினி ரஜனீஷ் பிறப்பித்த உத்தரவு:

மாநிலத்தின் பல்வேறு இடங்களில், பொது மக்கள் தங்களின் பிரச்னைகள், குறைகளை எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளிடம் கூறி, உதவி கேட்பர். மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்க, மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு போன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஆனால் மக்கள் பிரதிநிதிகள் போன் செய்தால், அதிகாரிகள் எடுப்பது இல்லை. அவசர பணிகளில் இருக்கும் போது, போனை எடுக்க முடியவில்லை என்றாலும், அதன்பின் என்ன காரணத்துக்காக மக்கள் பிரதிநிதிகள் போன் செய்தனர் என, அதிகாரிகள் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை என்பது, என் கவனத்துக்கு வந்துள்ளது. இதை பற்றி மேல்சபை தலைவரே, எனக்கு கடிதம் எழுதி விவரித்துள்ளார்.

இனி எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், லோக்சபா தலைவர், சபாநாயகர், மேல்சபை தலைவரின் தொலைபேசி எண்களை, அனைத்து அதிகாரிகளும் தங்களிடம் வைத்துக்கொள்வது கட்டாயம்.

இவர்களிடம் இருந்து, தொலைபேசி அழைப்பு வந்தால், அலட்சியப்படுத்தாமல் எடுத்து பேச வேண்டும். ஒருவேளை அவசர பணியில் இருந்தால், அந்த பணி முடிந்த பின், அவர்களை தொடர்பு கொண்டு பிரச்னைகளை கேட்டறிய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us