/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பழைய வாகனங்களை அழிக்க அரசு உத்தரவு
/
பழைய வாகனங்களை அழிக்க அரசு உத்தரவு
ADDED : செப் 17, 2025 08:37 AM
பெங்களூரு : கர்நாடகாவில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட, அரசின் வாகனங்களை, பழைய இரும்பு கடைக்கு அனுப்பும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் பல்வேறு துறைகளில், 15 ஆண்டுகளுக்கும் அதிகமான பழைய வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இத்தகைய வாகனங்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அது மட்டுமின்றி, இந்த வாகனங்கள் வெளியேற்றும் புகையால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
தனியார் மட்டும் அல்லாமல், அரசிடம் உள்ள பழைய வாகனங்களையும், பழைய இரும்பு கடைக்கு அனுப்பும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மாநில அரசும், 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை, பழைய இரும்பு கடைக்கு அனுப்பி, அழிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் அனைத்து துறைகள், கார்ப்பரேஷன், வாரியங்கள், மாநகராட்சிகள், ஆணையங்களில் உள்ள பழைய வாகனங்களுக்கும், இந்த உத்தரவு பொருத்தும். பழைய வாகனங்களை அழிக்க, அதிகாரிகள் தயாராகின்றனர்.