/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாவட்ட பஞ்.,களில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் மின் கட்டணத்தை குறைக்க அரசு திட்டம்
/
மாவட்ட பஞ்.,களில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் மின் கட்டணத்தை குறைக்க அரசு திட்டம்
மாவட்ட பஞ்.,களில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் மின் கட்டணத்தை குறைக்க அரசு திட்டம்
மாவட்ட பஞ்.,களில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் மின் கட்டணத்தை குறைக்க அரசு திட்டம்
ADDED : மே 07, 2025 11:08 PM
பெங்களூரு: கிராம பஞ்சாயத்துகளின் மின் நுகர்வு செலவை கட்டுப்படுத்த, அனைத்து மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்களை நியமிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கிராம பஞ்சாயத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
கிராம பஞ்சாயத்துகளின் மின் கட்டணம், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. கட்டுப்பாடின்றி மின்சாரம் பயன்படுத்துவதே, இதற்கு காரணம். இதற்கு கடிவாளம் போட, முதன் முறையாக, எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மின் கட்டண பில்களில் குளறுபடிகள் உள்ளன. அனைத்து மின்கம்பங்களிலும் எல்.இ.டி., பல்புகள் பொருத்தியும், மின் கட்டணம் குறையவில்லை.
இரவில் மட்டுமே தெரு விளக்குகள் ஒளிர்கின்றன. ஆனால் பில்லில் 24 மணி நேரமும் ஒளிர்வதாக கணக்கு காட்டப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும், மின் விநியோக நிறுவனங்களுக்கு, ஆண்டுதோறும் பயன்படுத்திய மின்சாரத்தை விட, கூடுதலாக 10 லட்சம் முதல், 15 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்துகின்றன.
மின் கட்டண பில்லுக்காக, கிராம பஞ்சாயத்துகள் அதிகம் செலவிடுவதால், பஞ்சாயத்துகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பணம் இல்லாமல் போகிறது.
மின்சாரத்துக்கு செலுத்தும் கூடுதல் தொகையை மிச்சப்படுத்தும் வகையில், மாவட்ட பஞ்சாயத்து அளவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்கள் நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக பெலகாவி மாவட்ட பஞ்சாயத்தில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெலகாவி மாவட்ட பஞ்சாயத்தின், 500 கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட கிராமங்களில், ஆழ்துளை கிணறு,
பம்ப்செட், தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரம் குறித்து ஆய்வு செய்த போது ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்ட நிலையிலும், மின் கட்டணம் செலுத்தப்பட்டது தெரிந்தது. இத்தகைய மின் இணைப்புகளை துண்டித்ததால், 13 கோடி ரூபாய் மிச்சமானது.
இதுபோன்ற நடவடிக்கை, மாநிலம் முழுதும் விஸ்தரிக்கப்படும். இதற்காக எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் நியமிக்கப்படுகிறார். இத்திட்டம் வெற்றி அடைந்தால், அரசுக்கு ஆண்டுதோறும் 200 முதல் 300 கோடி ரூபாய் வரை மிச்சமாகும்.
கிராம பஞ்சயத்துகளுக்கு அரசு வழங்கும் நிதியுதவியில், 25 சதவீதம் தொகை மின் கட்டணத்துக்கு செலவாகிறது. கிராம பஞ்சாயத்துகள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் விநியோக நிறுவனங்கள் வட்டியுடன் வசூலிக்கின்றன.
இது கிராம பஞ்சாயத்துகளுக்கு, பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது. இத்தகைய பிரச்னைகளை கையாள எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் உதவியாக இருப்பார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.